படிக்க நீங்க ரெடியா? ஜேஇஇ தேர்வு எழுதாமலே ஐஐடியில் படிக்கலாம்!

 
1
ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது பல லட்ச மாணவர்களின் கனவு. ஆனால், அதற்காக நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்றால்தான் ஐஐடி வளாகத்திற்குள் காலடியே எடுத்து வைக்க முடியும்.

இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எளிதான விசயம் இல்லை. போட்டிகள் மிகுந்த இந்த ஐஐடி வளாகத்திற்கு ஒருநாளாவது கால் வைத்துவிட மாட்டோமா என ஏங்கும் மாணவர்களுக்காக ஒரு புதிய பாடப் பிரிவைக் கடந்த 3 ஆண்டுகள் முன்னதாக தொடங்கி நடத்தி வருகின்றது மெட்ராஸ் ஐஐடி.Bs data science and applications என்ற படிப்பைக் கொண்டு வந்தோம். இது ஒரு வித்தியாசமான துறை. இதற்கு ஜேஇஇ தேர்வு எழுதத் தேவையில்லை. தகுதித் தேர்வு என்று ஒன்றை எழுதினால் மட்டும் போதும். நீங்கள் ஐஐடியில் படிக்க முடியும்.

இதை நீங்கள் ஐஐடி மெட்ராஸ் உள்ளே இருந்த படியே நான்கு வாரங்கள் படிக்கலாம். இந்த 4 வாரங்கள் வகுப்புகள் நடக்கும். அதைப் படித்து முடித்த பிறகு அதிலிருந்து ஒரு தேர்வு வைப்போம். இந்தப் படிப்புக்காகப் பாடங்களாக ஆன்லைனில் வீடியோக்கள் தரப்படும். ஒவ்வொரு வாரமும் அசைன்மெண்ட் தரப்படும். லைவ் வகுப்புகளில் பங்கேற்று உங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம். இந்த 4 வாரங்கள் படிப்பு முடிந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள 200 மையங்களில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று பரீட்சையை எழுதலாம்.

இந்தத் தேர்வில் 50%க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் அனைவரும் foundation level படிப்புக்குத் தகுதி பெறுவர். அதை முடித்த பிறகு டிப்ளமோ லெவல். அதை முடித்ததும் டிகிரி லெவல் என படிப்படியாகப் படித்து இறுதியாக, Bs data science and applications என்று பட்டத்தைப் பெறலாம்.

இதில் உங்களுக்கு என்ன அனுகூலம் என்றால், பாடங்கள் அனைத்தையும் கற்றுத்தருவது ஆன்லைன் மூலம்தான். நீங்கள் இதற்காக ஐஐடி வளாகத்திற்குத் தினம் வந்து போக வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால், பரீட்சையை நீங்கள் மையத்திற்கு வந்து நேரடியாகத்தான் எழுதியாக வேண்டும். இதன் பரீட்சைகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடைபெறும் என்பதால், இதனுடன் சேர்த்து நீங்கள் வேறு பட்டப்படிப்பையும் படிக்க முடியும். அதற்கு அவகாசம் நிறையே கிடைக்கும்.

இந்தப் படிப்பைப் படிக்க வயது வரம்பு கிடையாது. ஆகவே வேலைகளைச் செய்து கொண்டே நீங்கள் படிக்கலாம். இந்தப் படிப்பைப் படிக்க நிறையக் கட்டணச் சலுகைகள் தருகிறோம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1 லட்சம் இருந்தால், அந்த மாணவருக்கு 75% சலுகை அளிக்கின்றோம். ஆண்டுக்கு 5 லட்சம் வரை குடும்ப வருமான உள்ளவர்களுக்கு 50% கட்டண சலுகை தருகிறோம். அதனால் ஏழை எளிய மாணவர்கள் கூட இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதிச்சுமை என்பது இருக்காது" என்கிறார்