நகை வாங்க பிளானா? தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை..!!

 
Gold

செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகத்தில் இருந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து விலை சரிந்து வருகிறது. தங்கம் விலை குறைவதற்கு பல்வேறு உலகளாவிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விலை குறைவு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில், மற்ற நாடுகளில் தங்கம் ஒரு முதலீடாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில் நமது நாட்டில் மக்களின் கலாச்சாரம், கௌரவம் மற்றும் சொத்துமதிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் விலையேற்றம் இருந்தாலும் கூட பெரும்பாலானோர் தங்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி சேமிப்பதை நிறுத்துவதில்லை. 

ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, 22 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.

வெள்ளி விலை 7வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது