தவெகவில் இணைகிறீர்களா..? சட்டென KPY பாலா கொடுத்த பதில்..!

 
1

புதுச்சேரியில் 'தேடல் சேவகன்' என்ற அமைப்பிற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த நடிகர் கேபிஒய் பாலா, இதனை மக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். தான் ஈட்டும் வருமானத்தை மக்கள் சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தன்னிடம் இருப்பதாகவும், கடைசி வரை அந்தப் பாதையிலேயே பயணிக்க விரும்புவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தனது பணிகளுக்குப் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்களின் தேவைகளுக்காகத் தொடர்ந்து உதவி செய்வதே தனது ஒரே விருப்பம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.