தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா..? எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும் தெரியுமா..?
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், முன்பதிவு செய்த பயணிகள் சென்னையில் 16 இடங்களில் பேருந்துகளில் ஏறலாம். பயணிகளின் குறைகளை தீர்க்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 5ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து சேவையை செய்துள்ளார்கள். தற்போது அதனை தடுக்க தனி குழு அமைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்பட உள்ளது.
2. சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்த வெளி இடம், கிளாம்பாக்கம் ( தற்காலிக பேருந்து நிலையம்)
வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
3. மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்: (சோதனை அடிப்படையில்)
கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
4. கோயம்பேடு பேருந்து நிலையம்:
ஈசிஆர் வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
5. மாதவரம்:
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்
இந்த பேருந்துகளில் செல்வதற்கு முன்பதிவு செய்வதற்கு கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும், மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என 14 முன்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

