இன்று மேட்ச் பார்க்க போறீங்களா ? அப்போ உங்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

 
1

ஐபிஎல் போட்டியை காண பல ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த வருட ஐபிஎல் சீசன் (IPL 2024) 17-வது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த சீனனில் முதல் போட்டி என்பதாலும் இது சென்னை அணியின் போட்டி என்பதாலும் இந்த போட்டியை காண பல லட்சம் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டிகளுக்கு எப்போது டிக்கெட்டுகள் நேரில் தான் விற்கப்படும். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் டிக்கெட்டுகள் முதல் முறையாக ஆன்லைனில் விற்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது இந்த CSK Vs RCB போட்டியை காண சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு வருபவர்களுக்கு இலவச பஸ் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தாங்கள் வாங்கிய ஆன்லைன் டிக்கெட்களை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பின் படி போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இந்த சலுகை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.