திருப்பதி போறீங்களா..? ஜூன் மாதம் வரை இந்த தரிசனம் ரத்து!
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
தர்ம தரிசனம் (டோக்கன் இல்லாதவர்கள்): ஏழுமலையானைத் தரிசிக்க சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ரூ.300 விரைவு தரிசனம்: இதற்குக் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது.
இந்நிலையில், பாமர பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு (கோடைக்காலம் முடியும் வரை) கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
விஐபி தரிசனம் ரத்து: சிபாரிசு கடிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசனம் (VIP Break Darshan) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. (தன்னார்வ விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு).
இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி நகரில் வழங்கப்பட்டு வந்த நேரடி இலவச தரிசன (SSD) டோக்கன்கள் மற்றும் அலிபிரி நடைபாதைக்கான 'திவ்ய தரிசன' டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்குப் புதிய நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: பெற்றோருடன் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவர். மற்ற பக்தர்கள்: இரவு 10 மணி வரை நடைபாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

