யூடியூப் சேனல் ஆரம்பிக்க போறீங்களா..? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்..!

 
youtube

புதிதாக தொடங்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளை மிகவும் கடினமாக்கியுள்ளது யூடியூப் நிறுவனம்.

இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு யூடியூப் சேனல் பணமீட்டும் தகுதியைப் பெற 1,000 சந்தாதாரர்களுடன் (Subscribers) கடந்த 12 மாதங்களில் 4,000 வாட்ச் ஹவர்ஸ்களைப் (Watch Hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகளை (Shorts Views) எட்டியிருக்க வேண்டும். ஆனால், புதிய அறிவிப்பின்படி இந்த நிபந்தனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. 

இனி புதிய சேனல்கள் பணமீட்ட வேண்டுமெனில், கடந்த 12 மாதங்களில் 8,000 தகுதியான வாட்ச் ஹவர்ஸ்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். 1,000 சந்தாதாரர்கள் என்ற அடிப்படை நிபந்தனையில் மாற்றமில்லாவிட்டாலும், வாட்ச் ஹவர்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் பார்வைகளின் இலக்குகள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.

யூடியூப் நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி (01-02-2027) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.