பெட்ரோல், டீசல் போட போறீங்களா? அப்போ இதை முதல்ல படிங்க..!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருளை பாதுகாக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளை மூடுவதற்கு இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்க செயற்குழு முடிவெடுத்து உள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அரியானாவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று பரவும் தகவல் தவறானது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A post is going viral on social media claiming that after PM Narendra Modi’s call to conserve fuel, petrol pumps will remain closed every Sunday in certain states.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) May 14, 2026
❌ This claim is #FAKE
🚫 NEVER share unverified messages. Stay alert and rely only on trusted… pic.twitter.com/TPEmHHSIRP

