தங்கம் வாங்க போறீங்களா? இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு - வெள்ளி விலையும் அதிகரிப்பு!
Jul 15, 2026, 10:01 IST1784089883884
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 14) கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 15) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,180க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

