அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க போறீங்களா..? அப்போ இப்பவே பிரைஸ் லாக் செய்யுங்க..!

 
1

தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், நகைக் கடைக்காரர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக வரவிருக்கும் ஏப்ரல் 19 அன்று கொண்டாடப்படவுள்ள அட்சய திருதியை 2026 -ஐ தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.

அட்சய திருதியை அன்று தங்கம் விலை சவரனுக்கு ஆயிரக்கணக்கில் உயர்ந்தாலும், நீங்கள் இன்று என்ன விலைக்கு முன்பதிவு செய்கிறீர்களோ, அதே விலைக்கு நகைகளை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். ஒருவேளை அன்றைய தினம் விலை குறைந்தால்? கவலையே வேண்டாம், குறைந்த விலையில் நீங்கள் நகையை பெற்றுக் கொள்ளலாம். விலை ஏறினால் பழைய விலை. விலை இறங்கினால் புதிய விலை என வாடிக்கையாளர்களுக்கு இரட்டை லாபம் தரும் இந்த அதிரடி திட்டம் எப்படி செயல்படுகிறது? எந்தெந்த முன்னணி நகைக்கடைகள் இந்த சலுகையை வழங்குகின்றன?

இந்த சலுகையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் விலையில் 25% செலுத்தி விலையை லாக் செய்து கொள்ளலாம். இந்த திட்டமானது ஏப்ரல் 19 வரையில் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த 19ம் தேதிக்குள் விலை குறையும் நாளில் சென்று உங்கள் விலையை லாக் செய்து கொள்ளலாம். இது விலையேற்றத்தில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும். இந்த திட்டமானது சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக திருமண விழா போன்ற பண்டிகை காலத்திற்காக வாங்க நினைப்பவர்களுக்கு உதவலாம்.

நாடு முழுவதும் பல்வேறு நகை கடைகள் இதுபோன்ற ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆக உங்களுக்கு அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி, நம்பிக்கையான கடைகளில் புக் செய்யலாம். விலையும் குறைவாக கிடைக்கும். கூட்டம் குறைவு என்பதால் பொறுமையாக பிடித்ததையும் வாங்க முடியும்.