"சொத்து வாங்குறீங்களா? முதல்ல இதைச் செய்யுங்க!" – மனை விற்பனை ஆன்லைனுக்கு மாறியதால் வந்த சூப்பர் மாற்றம்!

 
1

தமிழகத்தில் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத் துறை நிர்ணயிக்கிறது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலங்களுக்கு, விவசாய வகைப்பாட்டுக்கான வழிகாட்டி மதிப்பு இயல்பாக இருக்கும். மனைப்பிரிவாக மாற்றப்படும்போது, குடியிருப்பு வகைப்பாட்டுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.

இதன்படி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விண்ணப்பங்கள், சார் பதிவாளர் வாயிலாக, மாவட்ட பதிவாளர்களுக்கு செல்லும். மாவட்ட பதிவாளர் வாயிலாக, மனைப் பிரிவுகளுக்கு புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படும். இந்த மதிப்புகள், காகித வடிவிலேயே, அந்தந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ளன. இதனால், புதிதாக வீட்டு மனை வாங்குவோர், வழிகாட்டி மதிப்புகளை தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, மனை விற்பனை 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்படும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்படுவதாக, சார் பதிவாளர்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் புகார் தெரிவித்தன.

இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மனைகள் விற்பனை பதிவு முழுமையாக, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் பணிகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இது தொடர்பான கோரிக்கையை ஆன்லைன் முறையில் பெற்று, மதிப்புகள் நிர்ணயிக்கப்படும். பொது மக்கள், இந்த மதிப்புகளை எளிதாக பார்க்கவும், பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.