லஞ்சம் கேக்குறாங்களா..? புகார் அளிக்க வாட்ஸ அப் எண் அறிவிப்பு..!

 
1

 அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமைச் செயலர் சாய்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை;

லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தொடர்பாக, '94981 80936' என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தொலைபேசி விபரம் அடங்கிய தகவல்களை, அனைத்து அரசு துறையினர், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும் இடங்கள், தொலைபேசி எண்கள் பற்றிய விபரங்கள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.லஞ்ச ஒழிப்புத் துறை போன் நம்பர், முகவரி ஆகியவை தமிழ், ஆங்கிலத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதன்படி, 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்ற வாசகத்துடன், ஊழல் குறித்த புகார்கள் அனுப்ப வேண்டிய இடமாக, 'ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம், எண் 293, எம்.கே.என்.தெரு, ஆலந்துார், சென்னை 600 016' என்ற முகவரி இடம்பெற வேண்டும்.

அதேபோல், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், பொது மக்கள் புகார் அளிக்கலாம். 044- - 22321090, 22321085, 22310989, 22342142 -ஆகிய தொலைபேசி எண்களிலும் புகார் தரலாம் என்பதை, அறிவிப்பு பலகைகளில் இடம்பெற செய்ய வேண்டும்.இதை, அந்தந்த கலெக்டர்கள், துறை செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், இதை ஆய்வு செய்து உறுதிப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.