SBI வாடிக்கையாளரா நீங்கள்..? இன்று முதல் அமலாகும் புதிய விதிமுறைகள்..!

 
1

இன்று முதல் SBI கிரெடிட் கார்டில் புதிய தாமதக் கட்டண விதி அமலுக்கு வருகிறது. முன்பு ரூ.500 வரை நிலுவை தொகைக்கு அபராதம் இல்லை என்ற சலுகை நீக்கப்பட்டு, இனி ரூ.100க்கு மேல் நிலுவை இருந்தாலே கட்டணம் விதிக்கப்படும். ரூ.101–500க்கு ரூ.100 அபராதமும், ரூ.501–1000க்கு ரூ.500 அபராதமும் வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.800 நிலுவை இருந்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரூ.1000க்கு மேல் பழைய விதிமுறை தொடரும்.

பணம் செலுத்துவதில் தொடர்ந்து தவறினால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும். இரண்டு முறை குறைந்தபட்ச தொகையை செலுத்தத் தவறினால், வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 100 ரூபாய் ஒவ்வொரு மாதமும் சேர்க்கப்படும். நிலுவை முழுமையாக செலுத்தும் வரை இது தொடரும் என வங்கி அறிவித்துள்ளது.

பிபிசிஎல் SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருடாந்திரக் கட்டண விலக்கு பெற 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அதேபோல், ரிவார்டு பாயிண்டுகள் 90 முதல் 120 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்; இல்லையெனில் அவை காலாவதியாகும்.

IMPS பரிவர்த்தனைகளில் 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும், ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் 5 நாட்களில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன. இல்லையெனில் தினம் 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வங்கி வலியுறுத்தியுள்ளது.