சமூகவிரோத குறும்புகளை செய்தவர்களா..? உள்நோக்கத்துடன் செய்த கட்சிகாரர்களா - ஜேம்ஸ் வசந்தனின் பரபரப்பு பேட்டி..!
ஜேம்ஸ் வசந்தன் சமீப நாட்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்த்,சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்றிருக்கிறார். உணவகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடியை யாரோ உடைத்துவிட்டார்கள். அதை அவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இது தறுதலைகள் செய்த காரியமா இல்லை தற்குறிகள் செய்த காரியமா என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இப்படியாகிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.
அதை பார்த்த பலரும் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டிருப்பதுடன், மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த கட்சித் தொண்டர்கள் காரணமாக இருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
#WATCH | பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு - நடந்தது என்ன? பரபரப்பு பேட்டி#SunNews | #JamesVasanthan | #Chennai pic.twitter.com/2PNUPm0P26
— Sun News (@sunnewstamil) April 27, 2026

