அரிசி, காய்கறி, எண்ணெய் விலை வேகமாக உயர்கிறதா?
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 35% வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் எல் நினோ விளைவால் சூழ்நிலை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கும் விவசாயிகள் மற்றும் வணிகர் அமைப்புகள் அதைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமெனக் கோரி வருகின்றனர்.
"மே மாதத்தில் ஒரு மூட்டை (25 கிலோ) அரிசி ரூ.1,400-க்கு விற்றது. அது ஜூலை மாத இறுதியில் ரூ.1,700 ஆனது. தற்போது 2,000 ரூபாயை கடந்துவிட்டது அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சர்க்கரை விலையும் ரூ.75ஐ தொட்டுவிட்டது.
"கடந்த ஆண்டு மிகுதியான நெல் உற்பத்தி இருந்தது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரிசியாக உற்பத்தி செய்யப்படாமல் வீணானதுதான் இப்போதைய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்குக் காரணம். அதோடு உணவுப் பொருட்களின் பதுக்கலும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம் என்ன?
சூரிய காந்தி எண்ணெய், பனை எண்ணெய் (பாமாயில்) போன்றவற்றின் விலை சற்று சீரடைந்துள்ளதாகக் கூறும் திருப்பூரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரியான கணபதி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற ரகங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

