"ஈரோடு மக்களே தயாரா?" – நவம்பர் 3-ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தருகிறார் முதலமைச்சர் விஜய்!

 
Vijay

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 3 ஆம் தேதியில் தனியார் கல்லூரியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் விஜய் ஈரோடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரோட்டில் சாலை வலம் செல்லவும் முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.