மாணவர்களே ரெடியா ? மே 5ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பப்பதிவு துவக்கம்..!

 
1

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. வரும் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு குறித்தான விவரங்களை உயர்கல்வித்துறை தெரிவித்து வருகிறது. மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மே ஐந்தாம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்படும்.

ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்ப பதிவு நடைபெற பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பணிகள் முடிந்த பின்னர் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்றும், ஜூலை மாதம் இரண்டாவது வாரம் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.