விவசாயிகளே தயாரா? முருங்கை ஏற்றுமதிக்கு தமிழக அரசு அழைப்பு..!

 
1
தமிழக அரசின் டி.என்.ஏபெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அழகுசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்திற்கு, பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஆண்டுக்கு, 200 டன் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வாய்ப்பு, டி.என்.ஏபெக்ஸ், தனியார் நிறுவனம், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுத்தப்படும்.

முருங்கை இலை சாகுபடி வாயிலாக சந்தை வாய்ப்பு பெற்று, நிலையான வருமானம் பெற, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை முன்வர வேண்டும்.
 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முருங்கை இலை சாகுபடி மூலம் நிலையான வருமானம் பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் டி.என்.ஏபெக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு:      https://www.tnapex.tn.gov.in/ords/r/wstnapex/tnapex173136/home?session=13700864695113

ஏற்றுமதியாகும் முருங்கை பொருட்கள்:

முருங்கை இலை பொடி

முருங்கை எண்ணெய்

முருங்கை விதை பொருட்கள்

முருங்கை தேனீர் பொருட்கள்

தமிழகத்தில் முருங்கை சாகுபடி:

மொத்த சாகுபடி பரப்பு: 20,741 ஹெக்டேர்

மொத்த உற்பத்தி: 8.41 லட்சம் டன்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கி, பொருளாதார ரீதியாக முன்னேறலாம்.

டி.என்.ஏபெக்ஸ் (TNAPEX) என்பது தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகும். இது தமிழ்நாடு அரசின் ஒரு நிறுவனமாகும்.