முட்டையில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் கலப்படமா? நாமக்கல்லில் அதிகாரிகள் ஆய்வு

 
ச் ச்

தடைசெய்யப்பட்ட ஆண்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தபடுகிறதா? என நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

முட்டை உற்பத்திக்காக தடைசெய்யப்பட்ட நைட்ரோஃபுரான் என்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.முட்டையில் எந்தவித நச்சு பொருளும் இல்லை என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று விளக்கமளித்து இருந்தது.தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தபடுகிறதா என பண்ணைகளில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 11 குழுக்களாக பிரிந்து நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 55 பண்ணைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு மாதிரிக்கு 10 முட்டைகள் வீதம் 55 மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர்.சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாகவும் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வின் முடிவில் தான் தெரிய வரும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.