62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். வாக்கு எண்ணும் மையத்தில் எந்த பதற்றமும் இல்லாமல் இருக்க காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், வாகனங்களை பார்கிங்ல் மட்டுமே நிறுத்த வேண்டும், சாலை ஓரம் நிறுத்தி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக்கூடாது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

