60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது. இதேபோல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த நவம்பர் மாதம், 21ம் தேதியும், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 09ம் தேதியும், 3வது வேட்பாளர் பட்டியலை கடந்த 15ம் தேதியும் வெளியிட்டது. இதனையடுத்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஆம் ஆதிமி கட்சி ஈடுபட்டுள்ளது.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார். .