முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் முறைகேடு- ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட அறப்போர் இயக்கம்

 
s

தவெக ஆட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் விட்டதில் ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ள முறைகேடு புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 


இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில், “முதல்வரின் உள்ளாட்சி நிர்வாக துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு! தாம்பரம் மாநகராட்சியில்  டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் .  ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.