நாளை கூடுகிறது சட்டப்பேரவை : மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா!!

 
mla

அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் கூடி வருகிறது.  நேற்று ஒரே நாளில் 1,728 பேர் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 121 ஆக உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் மாநில அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும்,  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ttn

இந்நிலையில் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அறந்தாங்கி தொகுதி  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து எம்எல்ஏ ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், " சட்டமன்றப் பேரவைக்  கூட்டம் நாளை  (5.1.22) தொடங்க  உள்ளதையொட்டி மேற்கொண்ட  கொரோனா பரிசோதனையில் எனக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மறுத்துவர்களின் அறிவுரைப் படி லேசான (Mild) அறிகுறி என்பதால்  வீட்டிலேயே என்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளேன்.  எனவே  அண்மையில் என்னோடு   அருகிலும், தொடர்பிலும் இருந்தவர்கள்  அனைவரும் கொரோனா பரிசோதனை  செய்து கொள்ளுமாறு  அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.  நாளை தமிழக பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.