மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்றுவழி என்ன? - ஆ. ராசா கேள்வி

 
மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்றுவழி என்ன? - ஆ. ராசா கேள்வி

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதிகளில் மாற்றுவழி என்ன? என திமுக எம்.பி. ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா, பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்ற முறையான கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிறது. இதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் பற்றிய வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்திற்கு மட்டுமே ஆபத்து இருந்தது. மோடி ஆட்சியில்  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை பாரபட்சமின்மை ஆகிய 6 கூறுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுதான் மிகவும் ஆபத்தானது” என்றார்.