தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. 4வது நாளாக இன்று சவரனுக்கு ரூ. 200 குறைவு..

 
தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. 4வது நாளாக இன்று சவரனுக்கு ரூ. 200 குறைவு..


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு ரூ 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 38,696  க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை சரிவு
சென்னையில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது  வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கள் கிழமை முதலே  தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.  அன்றைய தினம் சவரனுக்கு  264  ரூபாய் குறைந்து,  ஒரு சவரன்  39,296  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடந்து செவ்வாயன்று  சவரனுக்கு 248 ரூபாயும், நேற்று சவரனுக்கு  ரூ.200 ரூபாயும் குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி  ஒரு கிராம் 4,862 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம்  ரூ. 38,896 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
 சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக  இன்று  22 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் 200 ரூபாய் குறைந்திருக்கிறது.  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 4,837  க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 38,696க்கும்  விற்கப்படுகிறது.  அதேபோல் இன்றும்   சென்னையில் வெள்ளி விலை  குறைந்திருக்கிறது.  நேற்று மாலை   ஒரு கிராம் 69. 80 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி  இன்று கிராமுக்கு ரூ. 1 குறைந்திருக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.80 க்கும்,   ஒரு கிலோ வெள்ளி 68,800  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.