"கோயம்புத்தூர் ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரையில் நீட்டிக்க நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!!

 
thirumavalavan

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-யிடம் கீழ்க்காணும் கோரிக்கைகளை திருமாவளவன் முன் வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் ரயில் சேவை தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஒப்பிட்ட அளவில் வளர்ச்சியில் தேக்க நிலை இருக்கிறது. புதிய ரயில் தடங்களை உருவாக்குவது, புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது, ரயில்வே நிலையங்களில் கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் நடைபெறவில்லை. ஆக, இந்த வேறுபாடுகளை களைந்து தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

thiruma

*சிதம்பரம் வழியாக கடலூர் மைசூர் ரயிலுக்கான ஒப்புதல் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கான குறிப்பாணை அளிக்கப்படவில்லை. ஆக அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

* சிதம்பரம் வழியாக செல்லும் கடலூர் மைசூர் ரயில் சேவையை விரைவில் தொடங்கிடும் வகையில் கடலூரில் நடக்கும் ரயில்வே பணிகளை விரைவுப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thiruma

* சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கோயம்புத்தூர் ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரையில் நீட்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.