தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்

 
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். மேலும் சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடதக்கது.