தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் !!

 
govt

தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn govt

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதுடன் வளர்ச்சிப் பணிகளை விரிவுப்படுத்துவதன் காரணமாகவும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு அருணா ராய் ஐஏஎஸ், கோயமுத்தூர் மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் ,கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ் ஐஏஎஸ் ,காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு செந்தில்குமார் ஐஏஎஸ் ,நாகப்பட்டினத்திற்கு ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ் ,நாமக்கல் மாவட்டத்திற்கு குமரகுருபரன் ஐஏஎஸ், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாகராஜன் ஐஏஎஸ் உள்ளிட்ட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

TN


முன்னதாக வளர்ச்சி பணிகளை விரிவுபடுத்தவும்,  நலத்திட்ட பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டது.  மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும்,  பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும்,  இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது