திமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் நியமனம்- கனிமொழி, டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

 
கழக தலைவராக 6ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் - கனிமொழி வாழ்த்து..

திமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுகவை அதிர்ச்சி அடைய வைத்த அந்த செய்தி.. உடனே மறுப்பு சொல்லி டி.ஆர்.பாலு  விளக்கம் | dmk mp tr baalu released statement, we never participate pm  modi's cabinet - Tamil Oneindia

அதன்படி, மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உப்புமா கதை சொன்ன திருச்சி சிவா; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை! | DMK  MP Trichy Siva teased BJP by Upma story in rajya sabha - Vikatan

மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி., அவர்களும் மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., அவர்களும் இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.