உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம் - விதிகள் உருவாக்கம்

 
tn govt tn govt

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

assembly

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நியமன உறுப்பினராக போட்டியிட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். மாவட்ட அளவிலான குழு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து தகுதியான நபர்களை பரிந்துரை செய்யும்