விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டுமென நடை பயணம் - கைது என்றவுடன் ஓட்டம் பிடித்த தவெகவினர்
முதலமைச்சர் விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி, வேலூர் கோட்டை முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை வரை நடைபயணம் மேற்கொள்ள இருந்த தவெகவினரை பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பினர்.

முதலமைச்சர் விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி, வேலூர் கோட்டை முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை வரை நடைபயணம் மேற்கொள்ள இருந்த தவெகவினரை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்திய திருப்பி அனுப்பினர். அடுத்த 30 ஆண்டுகளுக்கு விஜய் முதல்வராக தொடர வேண்டி கையில் செங்கோலுடன் சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். அனுமதி இல்லை என கூறி அடுத்தடுத்து சாலையில் தடுப்பு அமைத்து காவல் துறை தடுத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை மீறி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தவுடன் த.வெ.க வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் தவெக தொண்டர்கள் காரில் புறப்பட்டு சென்றார்.

