உடனே விண்ணப்பீங்க..! இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
சென்னை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கோயில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34, மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் (01.07.2024 தேதியின்படி).தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த ஊதிய விகிதத்தின்படி, மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும். இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 மே 2025, மாலை 5.45 மணி வரை.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்:
* 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
* சாதிச் சான்றிதழ்
* இருப்பிட / முன்னுரிமை சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* பணி அனுபவ சான்றிதழ் (இருந்தால்)
* வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
இந்து சமய அறநிலையத் துறை,
எண்.119, உதயம் கார்டன் சாலை,
கில்பாக்கம், சென்னை – 600 034


