உடனே விண்ணப்பீங்க..! சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு காத்திருக்கு..!

 
1

காலிப்பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்:
 

  • மருத்துவ அலுவலர் (Medical Officer) - 60 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 60,000
  • செவிலியர் (Staff Nurse) - 60 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 18,000
  • பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW/ Multi-Purpose Health Worker) - 60 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 14,000
  • உதவி பணியாளர் (Support Staff) - 60 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 8,500
  • துணை செவிலியர் மற்றும் மருத்துவச்சி (Auxiliary Nurse and Midwife (ANM)) - 88 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 14,000
  • எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் (X-Ray Technician) - 6 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 13,300
  • சிறப்பு கல்வியாளர் (நடத்தை சிகிச்சை) (Special Educator for Behavioural Therapy) - 3 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 23,000
  • தொழில்முறை சிகிச்சையாளர் (Occupational Therapist) - 3 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 23,000
  • சமூக சேவகர் (Social Worker) - 3 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 23,800
  • மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Senior Lab Technician) - 1 காலிப்பணியிடம் - சம்பளம்: ரூ. 25,000
  • ஆய்வக கடை உதவியாளர் (Lab cum Store Assistant) - 1 காலிப்பணியிடம் - சம்பளம்: ரூ. 12,000

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025

முகவரி:

உறுப்பினர் செயலாளர்,

நகர நலவாழ்வு சங்கம்,

பொது சுகாதாரத் துறை,

ரிப்பன் கட்டிடம்,

சென்னை - 600003

மேலும் விவரங்களுக்கு:

சென்னை மாநகராட்சி இணையதளம்: www.chennaicorporation.gov.in

தொலைபேசி எண்கள்: 044-2561 9339, 044-2561 9209