உடனே விண்ணப்பீங்க..! தேர்வு கிடையாது! திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை.!
(Bharat Heavy Electricals Limited – BHEL) நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டிற்கான Apprenticeship பணிக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Trade Apprentice, Technician (Diploma) Apprentice மற்றும் Graduate Apprentice என மொத்தம் 530 Apprentice இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th + ITI, Diploma, B.E./B.Tech, B.Com மற்றும் B.A படித்தவர்கள் தங்களுக்கான தகுதியைப் பொறுத்து இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் ₹10,560 முதல் ₹12,300 வரை உதவித்தொகை (Stipend) வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2026 பிற்பகல் 3.00 மணி முதல் 12.09.2026 இரவு 11.45 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த BHEL Trichy Apprentice Recruitment 2026-க்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, காலியிடங்கள், உதவித்தொகை, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) |
| பிரிவு | BHEL Trichy |
| வேலை வகை | மத்திய அரசு வேலை 2026 |
| மொத்த காலியிடங்கள் | 530 |
| பணிகள் | Trade Apprentice, Technician Apprentice, Graduate Apprentice |
| கல்வித் தகுதி | 10th + ITI, Diploma, B.E./B.Tech, B.Com மற்றும் B.A |
| உதவித்தொகை | ₹10,560 – ₹12,300 / மாதம் |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்கம் | 14.08.2026 – பிற்பகல் 3.00 மணி |
| கடைசி தேதி | 12.09.2026 – இரவு 11.45 மணி |
| பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | trichy.bhel.com |
BHEL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
இந்த ஆட்சேர்ப்பில் Trade Apprentice, Technician (Diploma) Apprentice மற்றும் Graduate Apprentice பிரிவுகளில் மொத்தம் 530 இடங்கள் உள்ளன.
Trade Apprentice – 380 காலியிடங்கள்
| Trade | காலியிடங்கள் |
| Fitter | 125 |
| Welder | 115 |
| Electrician | 30 |
| Turner | 20 |
| Machinist | 20 |
| Instrument Mechanic | 7 |
| Motor Mechanic | 12 |
| Mechanic R & AC | 6 |
| COPA | 45 |
| மொத்தம் | 380 |
Technician (Diploma) Apprentice – 60 காலியிடங்கள்
| துறை | காலியிடங்கள் |
| Mechanical Engineering | 40 |
| Computer Engineering | 6 |
| Civil Engineering | 6 |
| Electronics & Communication Engineering | 3 |
| Electrical & Electronics Engineering | 5 |
| மொத்தம் | 60 |
Graduate Apprentice – 90 காலியிடங்கள்
| துறை | காலியிடங்கள் |
| Mechanical Engineering | 50 |
| Civil Engineering | 8 |
| Computer Science Engineering | 3 |
| Electronics & Communication Engineering | 3 |
| Electrical & Electronics Engineering | 3 |
| Accountant | 13 |
| Assistant – HR | 10 |
| மொத்தம் | 90 |
மொத்த காலியிடங்கள்: 380 + 60 + 90 = 530
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BHEL Apprentice Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Trade Apprentice | 10ஆம் வகுப்பு தேர்ச்சி + தொடர்புடைய Trade-ல் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ITI படிப்பு NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Regular Full-Time முறையில் முடித்திருக்க வேண்டும். |
| Technician (Diploma) Apprentice | 10ஆம் வகுப்பு தேர்ச்சி + தொடர்புடைய Engineering பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும். UR/OBC(NCL)/EWS – 60%, SC/ST – 50% குறைந்தபட்ச மதிப்பெண்கள். |
| Graduate Apprentice – Engineering | 10+2 தேர்ச்சி + தொடர்புடைய Engineering/Technology பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். UR/OBC(NCL)/EWS – 60%, SC/ST – 50% குறைந்தபட்ச மதிப்பெண்கள். |
| Graduate Apprentice – Accountant | 10+2 தேர்ச்சி + B.Com பட்டம் Regular Full-Time முறையில் முடித்திருக்க வேண்டும். UR/OBC(NCL)/EWS – 60%, SC/ST – 50% குறைந்தபட்ச மதிப்பெண்கள். |
| Graduate Apprentice – Assistant-HR | 10+2 தேர்ச்சி + B.A பட்டம் Regular Full-Time முறையில் முடித்திருக்க வேண்டும். UR/OBC(NCL)/EWS – 60%, SC/ST – 50% குறைந்தபட்ச மதிப்பெண்கள். |
BHEL Apprentice Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு 01.08.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.
வேலை வாய்ப்பு போர்டல்
வயது தளர்வு
| பிரிவு | வயது தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC (NCL) | 3 ஆண்டுகள் |
| PwBD – UR | 10 ஆண்டுகள் |
| PwBD – OBC | 13 ஆண்டுகள் |
| PwBD – SC/ST | 15 ஆண்டுகள் |
| Ex-Servicemen | அரசு விதிமுறைகளின்படி |
BHEL Apprentice Recruitment 2026 சம்பள விவரங்கள்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு ஏற்ப மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
| Apprentice பிரிவு | மாத உதவித்தொகை |
| Trade Apprentice | ₹10,560 / ₹11,040 |
| Technician (Diploma) Apprentice | ₹10,900 |
| Graduate Apprentice | ₹12,300 |
இது வழக்கமான நிரந்தர பணியாளர் சம்பளம் அல்ல; Apprenticeship பயிற்சி காலத்தில் வழங்கப்படும் Stipend ஆகும்.
BHEL Trichy Recruitment 2026 தேர்வு செயல்முறை
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Merit List
- Certificate Verification
அதாவது, தகுதியான விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
BHEL Trichy Recruitment 2026 முக்கிய தேதிகள்:
| நிகழ்வு | தேதி / நேரம் |
| விண்ணப்பம் தொடக்கம் | 14.08.2026 – பிற்பகல் 3.00 மணி |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.09.2026 – இரவு 11.45 மணி |
கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிப்பது நல்லது.
BHEL Trichy Recruitment 2026 – எப்படி விண்ணப்பிப்பது?
BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட படிகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- முதலில் உங்களுக்கான NAPS அல்லது NATS 2.0 Portal-ல் Registration செய்யவும்.
- Registration முடிந்த பிறகு கிடைக்கும் Registration/Enrolment Number-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் BHEL Trichy அதிகாரப்பூர்வ இணையதளமான trichy.bhel.com செல்லவும்.
- Apprentice Recruitment தொடர்பான அறிவிப்பைத் திறக்கவும்.
- உங்களுடைய கல்வித் தகுதிக்கு பொருந்தும் Trade/Discipline-ஐ தேர்வு செய்யவும்.
- Personal Details மற்றும் Educational Qualification விவரங்களை சரியாக உள்ளிடவும்.
- தேவையான ஆவணங்களை அறிவுறுத்தலின்படி பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பத்தில் கொடுத்துள்ள தகவல்களை ஒருமுறை சரிபார்க்கவும்.
- விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்யவும்.
- Application Form / Registration Number-ஐ Download அல்லது Print செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்ளவும்.
NAPS அல்லது NATS 2.0 இணையதளத்தில் – பதிவு செய்வது எப்படி?
Apprentice பிரிவைப் பொறுத்து முதலில் சம்பந்தப்பட்ட அரசு Apprenticeship Portal-ல் பதிவு செய்வது அவசியம்.
Trade Apprentice விண்ணப்பதாரர்கள்
- Trade Apprentice பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் RDSDE (NAPS) Portal-ல் பதிவு செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ Portal: apprenticeshipindia.gov.in
- NAPS Registration Number பெற்ற பின்னரே BHEL Trichy Portal மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Diploma / Graduate Apprentice விண்ணப்பதாரர்கள்
- Technician (Diploma) Apprentice மற்றும் Graduate Apprentice பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் MHRD NATS 2.0 Portal-ல் பதிவு செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ Portal: nats.education.gov.in
- BOAT/NATS 2.0 Student Enrolment Number பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே பயிற்சிக்காக பரிசீலிக்கப்படுவார்கள்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் முன் கீழ்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது:
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- ITI Certificate / Mark Sheets
- Diploma Certificate / Mark Sheets
- B.E./B.Tech Certificate / Mark Sheets
- B.Com / B.A Certificate / Mark Sheets
- Community Certificate, பொருந்தும் பட்சத்தில்
- PwBD Certificate, பொருந்தும் பட்சத்தில்
- NAPS Registration Number அல்லது NATS 2.0 Enrolment Number
- சமீபத்திய புகைப்படம்
- கையொப்பம்
- பிற தேவையான ஆவணங்கள்
ஏன் BHEL Trichy Apprentice Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க வேண்டும்?
BHEL Trichy Recruitment 2026 என்பது ITI, Diploma மற்றும் Degree முடித்த இளைஞர்களுக்கு தொழில்துறை அனுபவத்தைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்பாகும்.
- 530 Apprentice இடங்கள் உள்ளன.
- ITI, Diploma, B.E./B.Tech, B.Com, B.A படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் தொழில்முறை பயிற்சி பெறும் வாய்ப்பு.
- மாதம் ₹12,300 வரை Stipend வழங்கப்படுகிறது.
- பல்வேறு Engineering Trades மற்றும் Disciplines இடம்பெற்றுள்ளன.
- Merit List அடிப்படையில் தேர்வு நடைபெறுவதால் தனி எழுத்துத் தேர்வு இல்லை.
- Public Sector நிறுவனமான BHEL-ல் தொழில்துறை அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பு.
- 2022 முதல் 2026 வரை Diploma/Degree முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

