துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்..!

 
1

தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 5.44 % மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 16 முதல் ஜுன் 1ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.