பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 
tn

பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

tn

பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.  மொத்தம் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14,320 மாணவ மாணவிகளில்  8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 91.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.  மாணவிகள் 94.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்கள் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

tn

இந்நிலையில் பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் பாலிடெக்னிக் பட்டய படிப்புகளுக்கு http://tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.