தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

 
tn


தொழில் நல்லுறவு விருதுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடா்பாக தொழிலாளா் நலத்துறை ஆணையா் அதுல் ஆனந்த வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேலையளிப்பவா்கள், தொழிலாளா்கள் இடையே தொழில் அமைதியையும், தொழில் உறவை ஊக்குவிக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு "தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. 2017 முதல் 2020 -ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கென உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை தொழிலாளா் நலத் துறையின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை, தொழிலாளா் ஆணையா் அலுவலகத்துக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.