பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.. வேலூர் ஆட்சியர் அறிவிப்பு..

 
பெரியார் விருது

தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியாா் விருது பெற்றிட தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஏற்கெனவே இதுகுறித்து கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் , விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளா செய்திகுறிப்பில், “ சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான பெரியாா் விருது 1995- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளா் முதல்வரால் நேரடியாகத் தோவு செய்யப்படுகிறாா்.

2021- ஆம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தோந்தெடுக்கப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு அடைந்த சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விண்ணப்பங்கள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்” என்று தெரிவித்துள்ளாா்.