பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

 
1

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 5-ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 2-வது வாரம் வரை அவகாசம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளது.