இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு எப்போது? - தேதி அறிவிப்பு!

 
இந்திய மருத்துவப் படிப்புகள்

நடப்பு கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.)  மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் (நவ.18) முதல் தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

NEET UG: Tamil Nadu medical admission process and cut-off | Education  News,The Indian Express

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.)  மற்றும்  நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) பயில விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 18.11.2021 முதல் 10.12.2021 முடிய மாலை 5.00 மணி வரை மட்டும்  www.tnhealth.tn.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Medical admission postponed in Maharashtra: SC - Education Today News

மேலும், விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேடு, அரசு பள்ளிகளின் விவரம், விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு இதே வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.Get MBBS admission in Madhya Pradesh 2021|admission process|Fee  Structure|Top Medical Colleges

இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை, சென்னை - 600 106 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால்/கொரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 10.12.2021 மாலை 5.30 மணி வரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.