விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம்- மக்கள் நீதி மய்யம்
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் கொடுத்த கட்டணத்தை திரும்பி பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி 60 பேர் விருப்பமனு தாக்கல் செய்தனர். ஆனால் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்தார். இதனால் தேர்தலுக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.50,000 வசூலித்த நிலையில், அதனை நிர்வாகிகள் திருப்பிக்கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்ற மக்கள் நீதி மய்ய அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் கொடுத்த கட்டணத்தை திரும்பி பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. நாளை முதல் 16ம் தேதிக்குள் கட்டணத்தை சென்னை, மநீம தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. கட்டணத்தை திரும்பி வழங்க தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில் மக்கள் நீதி மய்யம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



