ஆப்பிளின் பிரம்மாண்ட “சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்” நிகழ்வு: அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது ஐபோன் 18 ப்ரோ!
ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட “சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்” நேரலை நிகழ்வு இன்று நடைபெறுகிறது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில், ஐபோன் 18 வரிசை போன்கள் மற்றும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆப்பிளின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்தும் முதல் முக்கிய ஆப்பிள் நிகழ்வு இது என்பதால், உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப விரும்பிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிகழ்வின் மிக முக்கியமான சிறப்பம்சமாக ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 'ஐபோன் அல்ட்ரா' இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தக வடிவில் மடிக்கும் அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், விரிக்கும் போது 7.8 இன்ச் ஓஎல்இடி திரை கொண்டதாகவும், வெளிப்புறத்தில் 5.4 முதல் 5.5 இன்ச் வரையிலான கவர் திரையைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் சட்டகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த போன், விரிந்த நிலையில் 4.5 மிமீ தடிமனும், மடிந்த நிலையில் 9 மிமீ தடிமனும் கொண்டிருக்கும்.
இதில் முக அங்கீகாரத்திற்கு (Face ID) பதிலாக, பவர் பட்டனில் கைரேகை சென்சார் (Touch ID) வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இதில் 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவான ஏ20 புரோ சிப்செட், 12ஜிபி ரேம், 48 மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் 4,900mAh முதல் 5,800mAh வரையிலான பேட்டரி திறன் இடம்பெறலாம். சந்தையில் இதன் ஆரம்ப விலை $1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,90,000) முதல் $2,299 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 18 புரோ மாடல் 6.3 இன்ச் திரையுடனும், ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் திரையுடனும் வெளிவரவுள்ளன. இவை இரண்டிலும் மிக அதிநவீன ஏ20 புரோ 2என்எம் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 18 புரோவின் முதன்மை கேமராவில் ஒளியின் அளவிற்கு ஏற்ப மாற்றி அமைக்கும் 'வேரியபிள் அபெர்ச்சர்' தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் புதிய ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.
ஆப்பிளின் புதிய சிலிக்கான் ஆன A20 ப்ரோ சிப் உடன் ஐபோன் 18 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2என்எம்-ஜென்ரேஷன் சிப், 6-கோர் CPU மற்றும் 7-கோர் GPU ஆதரவுகளுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் 16-கோர் நியூரல் இன்ஜின் ஆதரவும் உள்ளது. C2 மோடம் ஆதரவுடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடல் ஒரு சிறிய டைனமிக் ஐலேண்டுடன் வரும். அதேபோல் இது iOS 27 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
Siri AI வசதியுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Siri AI என்பது Apple Intelligence-ஆல் இயக்கப்படும் Siri-யின் முற்றிலும் புதிய பதிப்பாகும். இது மிகவும் தனிப்பட்டதாகவும், திறன் வாய்ந்ததாகவும், உரையாடல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதேபோல் இந்த Siri AI வசதி ஆனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு அறிவார்ந்த தனிப்பட்ட மையமாக மாறுகின்றன என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
48எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4கே வீடியோ பதிவு ஆதரவு, மேம்பட்ட சினிமாட்டிக் ஷூட்டிங் ஆதரவு மற்றும் கூடுதல் எடிட்டிங் அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18எம்பி கேமரா கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மாடல். குறிப்பாக 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஆகிய வேரியண்ட்களில் இந்த ஐபோன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25W வரையிலான வரையிலான MagSafe மற்றும் Qi2 வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது ஐபோன் 18 ப்ரோ மாடல். மேலும் ஐபோன் 18 ப்ரோ மாடலை 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் ஒரே சார்ஜில் 36 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குவதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் இது eSIM சப்போர்ட் கொண்டுள்ளது.
நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மாடல். மேலும் இதில் 6 மீட்டர் ஆழம் வரை 30 நிமிடங்கள் வரை நீர் எதிர்ப்புத் திறன் இருக்கும் என ஆப்பிள் உறுதியளிக்கிறது. மேலும் இந்த போனில் கேமரா கண்ட்ரோல் மற்றும் ஆக்சன் பட்டன்களையும் தக்கவைத்துக் கொள்கிறது ஆப்பிள் நிறுவனம். பிளாக், சில்வர், க்ளேசியர் (Glacier), பர்கண்டி ஆகிய கலர்களில் இந்த ஐபோன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 1,64,900-ஆக உள்ளது. இந்த போனின் முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும்.