வகுப்பறைகளை மது குடிக்கும் பார்-ஆக மாற்றிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா?- அப்பாவு
கல்லூரிகளை போதைப் பொருள் விற்பனை மையங்கள் ஆக்கி வகுப்பறைகளை மது குடிக்கும் பார்-ஆக மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில் மயக்கத்தில் கள்ள மவுனம் இருக்குறீர்களே CM sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “கோவை தனியார் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக மாணவர் அமுதன் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் 20 பேர் கொண்ட மாணவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அடுத்த 3 தினங்களில் சென்னை திருவெற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ் போதைப்பொருள் பயன்படுத்தியதை காட்டிக்கொடுத்ததாக சக மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கும்பல் 30 பேர் சேர்ந்து ஈவிரக்கமின்றி அடித்து கொன்ற சம்பவத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டு காவல்துறை பயனற்ற சினிமாவில் தோன்றும் காவல்துறையாக மாறி விட்டதோ ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது CM sir?
அதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் Neet கோச்சிங் சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய கொடுமை காவல்துறையை கையில் வைத்திருக்கும் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது ஒட்டுமொத்த காவல்துறையையும் உங்கள் நண்பர்களிடமே கொடுத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா CM sir ? தமிழ்நாட்டில் பெரும்பாலும் உங்கள் கட்சியினர் தான் காவல்துறை ஒத்துழைப்போடு தங்கு தடையின்றி மாணவ-மாணவிகளிடம் போதை பொருட்களை விற்பனை செய்து வருவது உங்களுக்கு தெரியுமா? இதுவரை தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் உங்கள் கட்சியினர் மூலம் தமிழக மாணவ மாணவிகளை சீரழிக்க துணிந்து விட்டீர்களா CM sir ?
முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் கொடுத்தார்.. நீங்களோ மாணவ மாணவிகளைத் தேடி மதுவை கொடுக்குறீர்களே ! கல்லூரிகளை போதைப் பொருள் விற்பனை மையங்கள் ஆக்கி வகுப்பறைகளை மது குடிக்கும் பார்-ஆக மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா ? இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில் மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்குறீர்களே CM sir?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

