குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM Sir?- அப்பாவு
விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் #குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM Sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “"குறை பிரசவம்" போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இங்குபெட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் #காங்கிரஸ், #விடுதலைச்சிறுத்தைகள், #முஸ்லிம்லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது #RSS சித்தாந்தம் கொண்ட பாஜக ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவது நம்பிக்கை துரோகம் இல்லையா CM sir? இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு "ராகுல் காந்தி தகுதி இல்லை" என்பது போலவும் ,"அடுத்த பிரதமர் விஜய் தான்" என்றும் சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் பேசிய போது காங்கிரஸ் #எம்எல்ஏ-க்களும் வெட்கமின்றி மேஜையைத் தட்டி ரசிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்டதுதான் வேடிக்கை. விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் #குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM Sir?
"அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்" என்ற வடஇந்திய பழமொழிக்கு ஏற்ப பொய்களை உண்மை போல் ரீல்ஸ்களாக்கி நீங்கள் தொடங்கி வைத்த செயல், தற்போது அமைச்சர்கள் முதல் தவெக அடிமட்ட தொண்டர்கள் வரை பரவி எங்கும் ரீல்ஸ் எதிலும் ரீல்ஸ் என்ற நிலை உருவாகி சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட Fake id மூலம் ரீல்ஸ் விடும் கேவலமான செயலை செய்துவருகிரீர்களே CM sir ! தவெக ஆட்சியில் தமிழக மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் நோயாளி இறந்தால் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடி மரண தண்டனை என்றும், கோவில் உண்டியல் வருமானத்தில் கல்விக் கூடம் கட்டி மக்கள் பயனடைந்து வருவது போன்றும் பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில், பல நூறு கோடி ரூபாய் செலவில் #இந்தியில் ரீல்ஸ் தயாரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தவெகவின் நரித்தனத்தை இந்தியாவே பார்த்து சிரிப்பதுடன், உங்கள் fake id மூலம் பொய் Reels பரப்புவதை #நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கித்தரவும் மக்கள் தயாராகி வருகின்றனர் CM sir !” எனக் குறிப்பிட்டுள்ளார்.

