கை செய்கை மூலம் நையாண்டி தேவையா? - அப்பாவு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா? கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா? சிறுகதை என்று கூறி உங்கள் அப்பா எங்கே என்ற நக்கல் பேச்சு தேவையா? கை செய்கை மூலம் நையாண்டி தேவையா ? இது முதல்வரின் உரையா? Reels-க்கான உரையா? CM sir, தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா? அங்கன்வாடி பணியாளர்கள் - மாத ஊதியம் ரூ 18,000 எங்கே?
அங்கன்வாடி உதவியாளர்கள் -மாதம் ஊதியம் ரூ 10,000எங்கே? காவல்துறை காவலர்கள் அடிப்படை ஊதியம் ரூ25,000 எங்கே?
SC/ST மக்கள் தாட்கோவில் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே? மீனவர்கள் தடைக்கால நிவாரணம் ரூ 20,000 எங்கே? மீனவர்கள் மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே? பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ 15,000 எங்கே? அன்னபூரணி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் எங்கே? மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்கள் மாத உதவித் தொகை ரூ4000 எங்கே? CM sir நினைவிருக்கிறதா?மக்கள் குரல் கேட்கிறதா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

