“விஜய் இன்னும் கற்பனையிலேயே இருக்கிறார்”- அப்பாவு

 
அப்பாவு அப்பாவு

நடிகர் விஜய் கற்பனையில் இருந்தால் நான் என்ன செய்வது? ராகுல் காந்திக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஜனநாயக படுகொலை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அப்பாவு


நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு நாள் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பொதுமக்களோடு பொதுமக்களாக அமர்ந்து உணவருந்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “நலிந்த கல்லூரிகளுக்கு நிதி உதவி செய்வதுதான் யுஜிசி உடைய வேலை. யுஜிசி அந்த பணியை செய்யாமல் ஏற்கனவே கல்லூரிகளில் இருக்கின்ற சட்டதிட்ட பணிகளை மாற்றி செயல்படுகிறது. ஆளுநருக்கு இது தெரியுமோ தெரியாதோ.யுஜிசிக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திலும் எந்த தொடர்பும் கிடையாது. ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறக்கூடிய மசோதாக்களுக்கு அனுமதி தரப்படாமல் ஆளுநர் இருக்கிறார். அண்ணா ஆட்சியில் ஊழல் இல்லை, திமுக ஆட்சியில் ஊழல் இருக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 


அண்ணாமலை அருகில் இருப்பவர்கள் மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்றெல்லாம் அவரிடம் கேளுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே பாஜகவினர் மதிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்திக்கு பேச அனுமதி அளிக்காதது ஒரு ஜனநாயக படுகொலை. பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்த பிறகு எத்தனை பிரச்சனைகள் வந்திருக்கிறது என்று பாருங்கள். தேசிய பாதுகாப்பு பொருத்தவரை நாட்டு மக்களுக்கு உண்மை வெளிப்படையாக சொல்ல வேண்டும். விஜய் கற்பனையில் இருக்கிறார். இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கற்பனையில் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்கம் விலையை பிரதமர் குறைக்க வேண்டும் என்று கூறினேன். அது டெல்லி வரை எதிரொலித்து இருக்கிறது. அதனால்தான் தங்க விலை குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.இந்தியாவிற்கு சுற்றியுள்ள நாடுகள் சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்கா தீர்மானிக்கிறது” என்றார்.