மூன்றே நாட்களில் புற்றுநோய் கட்டியை அகற்றி அப்போலோ சாதனை

 
apollo

சென்னையை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு மூளையில் இன்சுலா எனப்படும் சிக்கலான அடிப்பகுதியில் கட்டி இருந்து உள்ளது. இதனை டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் அணுகுமுறையில் அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கபக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஹிருஷிகேஷ் சர்க்கார், பிரதீப் பாலாஜி, விக்னேஷ்,  அக்னிஷியா வினோத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னையை சேர்ந்த  44 வயதுடைய பெண் மூளையில் டாமினன்ட்-பக்க இன்சுலர் மடலின் மெல்லிய மடிப்புகளுக்குள் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. செரிப்ரல் கார்டெக்ஸுக்குள் ஆழமான இடத்தில் அமைந்து இருக்கும்  இன்சுலாவில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம். அந்த பகுதிகளில் ரத்த நாளங்களின் அடர்த்தியான வலைப் பிணைய அமைப்பால் அடுக்குகளாக அமைந்துள்ளது.

பாரம்பரிய அறுவை சிகிச்சை அணுகுமுறைகளில், பாராலிசிஸ், ஸ்ட்ரோக், மொழிக் குறைபாடு போன்ற ஆபத்துகளில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  மேலும் வலிப்புத் தாக்கங்கள் மற்றும் மூளை வீக்கங்கள் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தையும் இது அதிகரிக்கும். இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மைய மருத்துவர்கள் புருவத்தில் சிறிய கீறல் மூலம் இன்சுலாவை எட்டும் இந்த புதிய கீஹோல் அணுகுமுறையை பயன்படுத்தி அந்த கட்டியை அகற்றினர். இதற்கு பொதுவாக 2 அல்லது 3 லட்சம் வரை செலவு ஆகும். காப்பீடு மூலமும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். எந்த வயதுக்குட்பட்டோருக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம்” என்றும் கூறினர்.