நீட் நுழைவுத் தேர்வு குறித்த அப்டேட் கொடுத்த ஒன்றிய அரசு

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடப்பாண்டு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
12 ஆம் வகுப்புக்கு பிறகு மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET) பதிவு தொடங்க உள்ளது. உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, நீட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கு முன், மாணவர்கள் தங்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களுடன் தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டையை APAR (தானியங்கி நிரந்தர கல்விப் பதிவு) ஐடியுடன் இணைக்க வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள அவர்களின் பெயர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ள அவர்களின் பெயர்களுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், மாணவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை அதற்கேற்ப புதுப்பிக்க வேண்டும் என்றும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கத் தவறிய மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிரமங்களை சந்திப்பதுடன் தேர்வில் பங்கேற்க முடியாமல் போகலாம் என எச்சரித்துள்ளது. நீட் தேர்வு நடப்பாண்டு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.