“டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்... 2 ஆண்டுகள் நரக வேதனை”- அனுபமா பரபரப்பு பதிவு

 
s

தனது ஆண் நண்பருடனான அனுபவம் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Anupama Parameswaran's narcissistic abuse revelation sparks speculation  about Dhruv Vikram

அதில், “நான் ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஒரு நாள் அவர் ‘ரெமோ' போல நடந்துகொள்வார். என் மீது அளவற்ற காதல் வைத்திருப்பது போலக் காட்டிக்கொள்வார். ஆனால், அடுத்த நாளே ‘அந்நியன்’ போல மாறிவிடுவார். அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். அதற்கு அடுத்த நாளோ ‘அம்பி'யாக மாறி, ஒரு குழந்தையைப் போல கெஞ்சி மன்னிப்பு கேட்பார். அவருடன் இருந்த நாட்களில் நிம்மதியை விடப் பயத்தைத்தான் நான் அதிகமாக உணர்ந்தேன். நான் இப்படி ஒரு கசக்கும் உறவுக்குள் இருந்தேன். அவர் ‘டிராகன்’ போன்ற படங்களின் ப்ரமோஷன்களுக்கு கூட என்னை போகவிடவில்லை.

கடந்த கால காதல் உறவில் சுமார் 2 ஆண்டுகள் கடுமையான மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன். அந்த காலக்கட்டத்தில் மனதளவிலும் உடலளவிலும் பாதிகப்பட்டு, என் உடல் எடையை கணிசமகா குறைத்தேன். எனது இந்த பதிவுக்கு பின்னால் 2 ஆண்டுகால வலியும் போராட்டமும் உள்ளது. எனது முன்னாள் காதலர் நான் அணியும் ஆடை முதல் அனைத்தையும் கட்டுப்படுத்தியதோடு, ஒருநாள் அன்பாகவும், மறுநாள் கொடூரமாகவும் வேதனை கொடுத்தார். இந்த 2 ஆண்டுகளாக நரக வேதனையிலிருந்து இப்போது நான் முழுமையாக மீண்டு வந்து சுதந்திரமாக எனது வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.