அரசு அலுவலகங்களில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!! பல லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்..
மாநிலம் முழுவதும் அரசு அலுலவகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யபப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பொதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அரசு அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த சமயங்களில் கணக்கில் வராத பணம் பிடிபடும்.

அந்தவகையில் நேற்று இரவு முதல் விடிய விடிய தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சென்னை கிண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,20,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பூவிருந்தவல்லி நகர அமைப்பு அலுவலகத்தில் மாலை 5 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை நடந்த சோதனையில், ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 1,94,00 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.


